நபியவர்களின் காலம் விஞ்ஞானத்தின் இருண்ட யுகமா?

நபியவர்களின் காலம் விஞ்ஞானத்தின் இருண்ட யுகமா?


இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் துரித வளர்ச்சி கண்டு
வருகின்றன. அதிலும் விஞ்ஞானத் துறையின் கண்டுபிடிப்புக்கள் இவ்வுலகின் வேகமான வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றமை அனைவரையும் வியப்பிற்குள் ஆழ்த்தியுள்ளது. எனினும்,
முஸ்லிம்களாகிய எமக்கு இதுவொன்றும்
பெரிய விடயமல்ல. ஏனெனில் அனைத்து
கண்டுபிடிப்புக்கள் பற்றியும் ஏற்கனவே
"அல்-குர்ஆன் " எனும் புனிதநுாலில்
பதியப்பட்டுவிட்டது.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


அல்-குர்ஆனில் அல்லாஹ் "முஸ்லிம்களே!" என்று விழித்ததோடு, "மனிதர்களே!", "மானிடர்களே!” என்றுதான் அதிகமான இடங்களில் அழைக்கிறான். இவ் வசனநடையானது அல்லாஹுத்தஆலா அல்-குர்ஆனை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு உலகவாழ் மக்களுக்குமே அருளியுள்ளான் என்பதைப் புலனாக்குகிறது. இன்று உலகில் அல்-குர்ஆனை மூலாதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டு முஸ்லிம்கள் உட்பட பிற சமூகத்தினர் மூலம் எத்தனையோ கண்டுபிடிப்புக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இச்செயலினூடாக அல்லாஹ், அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதொன்றல்ல என்பதை நிரூபித்துவிட்டான்.

ஆனாலும் பிற சமூகத்தவர்களுடன்
ஒப்பிடுகையில் இஸ்லாமியர்களான நாம் எமது கடமையில் தவறிவிட்டோம் என்பது
கசப்பான உண்மையாகும். ஏனெனில்
அவர்கள் அல்-குர்ஆனை அலசிப் பார்க்குமளவிற்கு நாம் அல்குர்ஆனை
ஆராய முன்வருவதில்லை.
அல்-குர்ஆனை நாம் வெறும் வேதநூலாக மாத்திரமே நோக்குகின்றோமே தவிர
அல்-குர்ஆனினுள் முழு அண்டசராசரமே
அடங்கியுள்ளமை பற்றி சிறிதும்
சிந்திப்பதேயில்லை. எத்தனையோ
பிரச்சினைகளுக்கு விடைகாண
அங்குமிங்கும் அலைகிறோம். ஆனால்
எல்லா ஐயங்களுக்குமான விளக்கங்களும், தெளிவுபடுத்தல்களும்
அல்-குர்ஆனில் உள்ளதை நாம்
மறந்துவிட்டோம். ஆனால் யூதர்கள் அல்-
குர்ஆனை மிகவும் நுட்பமாகக்
கையாளுகின்றனர்.

நாம் சற்றே ஐரோப்பிய வரலாற்றை நோக்குவோமானால் அது புராதன காலம், இருண்ட காலம், நவீன காலம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புராதன காலமென்பது கிரேக்க, உரோம நாகரிகங்களை உள்ளடக்கிய வளர்ச்சிமிகு காலப்பகுதியாகும். ஆனால் ஐரோப்பாவின் இருண்ட காலம் எனப்படும் கி.பி. 476-600 வரையான காலப்பகுதியிலும் அதனைத்தொடர்ந்து, கி.பி 1400 வரையான காலப்பகுதியிலும் எவ்வித வளர்ச்சியையும் ஐரோப்பா கொண்டிருக்கவில்லை என வரலாறு கூறுகிறது. இக்காலப்பகுதியில் திருச்சபையினதும், பாப்பரசரினதும் செல்வாக்கே மேலோங்கிக் காணப்பட்டதாகவும், அவர்கள் மனிதர்களை சுயமாக சிந்திக்கவிடவில்லை எனவும் வரலாறு பரைசாற்றுகிறது. எனவேதான் இதனை இருண்ட காலமென வர்ணித்ததாகவும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல, அல்-குர்ஆன் ஆனது கி.பி 610-633 வரையான காலப்பகுதியிலேயே அருளப்பட்டது.
அல்-குர்ஆன் என்பது மண்ணியல், சமுத்திரவியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கருவியல், கணிதம், மருத்துவவியல், உடல் செயலியல், சமூகவியல், அழகியல், விண்ணியல் போன்ற எத்தனையோ துறை சார்ந்த விளக்கங்கள் அடங்கியுள்ள ஒரு பிரபஞ்சம் என்பதனை நன்குணர்ந்து யூதர்கள் அல்-குர்ஆனின் தோற்றத்தையும் அதனுள் அடங்கியுள்ள அறிவியல் பேருண்மைகளையும் மறைப்பதற்காகவே இருண்ட காலம் (கி.பி. 476-1400) என்றொரு
காலப்பகுதியை வரலாற்றினூடு
சிருஷ்டித்துள்ளார்கள். அதுமட்டுமல்ல
இக்காலப்பகுதியிலேயே முஸ்லிம் பேரரிஞர்கள் பலர் தோன்றியுள்ளனர்.
இவ்வாறானவர்களின் வளர்ச்சியையும்
யூதர்கள் இருண்ட காலத்தினூடு சாவகாசமாக மறைத்து விட்டனர்.

எம்மிடம் ஒருவர் "மருத்துவத்தின் தந்தை யார்?" என வினவினால் நாம் அனைவரும் உடனே கூறும் பதில் "ஹிபோகிரடீஸ்" என்பதுதான். ஆனால் மருத்துவத்தின் தந்தை 'அலி இப்னு ஸீனா' என்பதை நாம் எத்தனை பேர் அறிவோம்? இப்னு ஸீனா கி.பி 980 காலப்பகுதியைச் சேர்ந்தவர். அதாவது இருண்டகாலமாக வர்ணிக்கப்பட்ட பகுதிக்குரியவர். ஐரோப்பிய வரலாறு இப்னு ஸீனாவையும் அவருடைய மருத்துவத்தையும் புதைத்துவிட்டதைப் பார்த்தீர்களா?

அல்-குர்ஆனையும் அதன் அறிவியல்
பேருண்மைகளையும் முஸ்லிம்
பேரரிஞர்களையும் மறைத்தது மட்டுமன்றி நவீன காலம் என்றொரு புது யுகத்தினூடாக அல்-குர்ஆனிலுள்ள
அறிவியல் பேருண்மைகளை தமது
கண்டுபிடிப்பாக உலகிற்கு சமர்ப்பித்தார்கள். இன்று வரைக்கும்
சமர்ப்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
அதனூடு நோபல் பரிசு போன்ற
எத்தனையோ அதியுயர் விருதுகளையும்
யூதர்கள் தட்டிச் சென்று விட்டனர்.
அவ்வாறு பல விருதுகள் பெற்ற
ஆனால் அல்-குர்ஆனில் ஏற்கனவே
பதியப்பட்டு விட்ட சில கண்டுபிடிப்புக்கள்
பற்றி நோக்குவோம்.

1838 இல் Schwaan, Schleiden ஆகியோரால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட கலக்கொள்கையின்படி உயிர்கள் அனைத்துமே ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கலங்களால் ஆக்கப்பட்டவை என்பது யாவரும் அறிந்ததே. கலங்களினுள் காணப்படும் முக்கிய கூறு நீராகும். அதாவது கலங்களினுள் அண்ணளவாக 75% நீர் காணப்படுகிறது. எனவே உயிரங்கிகள் நீரிலிருந்தே படைக்கப்பட்டிருக்கின்றன என்பது புலனாகின்றது. இது இன்றைய அறிவியலின் சமீபகால கண்டுபிடிப்பாகும். ஆனால் அல்-குர்ஆனில் "உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே உண்டாக்கினோம். என்பதையும் இந்நிராகரிப்போர் பார்க்கவில்லையா? இதனைப் பார்க்கும் அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்களா ?” (21: 30) என்ற வசனம் அமைந்துள்ளது. எனவே, கலக் கொள்கையின் அடிப்படையை அல்குர்ஆன் எப்போதோ கூறிவிட்டது.

பார்த்தீர்களா? விஞ்ஞானக்
கண்டுபிடிப்புக்களுக்கும் அல்-குர்ஆன்
இற்குமிடையிலான நெருங்கிய தொடர்பை.

"இன்னும் அவன் எத்தகையவனென்றால்
இரவையும், பகலையும் , சூரியனையும்
சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் (வானத்தில் தமக்குரிய) மண்டலங்களில் நீந்திச் செல்கின்றன" (21:33)
இதில் தமக்குரிய
மண்டலங்கள் என அல்லாஹ்
குறிப்பிட்டிருப்பது orbital (ஒழுக்குகள்) களையே ஆகும். எனவே அல்லாஹ்
கோள்கள் அனைத்தும் சூரியனை
தமக்குரிய பாதையில் சுற்றி வருகின்றன
என்று கூறி பல வருடங்கள் கடந்துவிட்ட
நிலையில் கி.பி. 1609 இல் ஜேர்மனைச்
சேர்ந்த Johannes Kepler தனது
Astronomia Nova என்ற நூலில் “கோள்கள்
தமக்குரிய முட்டை வடிவப் பாதையில்
சூரியனைச் சுற்றி வருகின்றன" என்ற தன் கருத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனவே பாரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் கூட ஏற்கனவே அருளப்பட்ட அல்-குர்ஆனில்
உள்ளடக்கப்பட்டுவிட்டது என்றால் அதன்
அற்புதத் தன்மையை முழு சமூகமும்
உணர வேண்டும்.

எம் உடலின் தோலில் பல வகையான வாங்கிகள் உண்டு. அவற்றில் வலியை உணரும் நரம்பு முடிவிடங்களும் ஏராளம். கடுமையான வெப்பத்திற்கு தோலும் நரம்பு முடிவிடங்களும் அழிக்கப்பட்டுவிடும். இதனால் வலி உணரப்படமாட்டாது என்கிறது நவீன விஞ்ஞானம். இந்த கருத்தை 1400 வருடங்களுக்கு முன்னே அல்-குர்ஆன் கூறிவிட்டது. "நிச்சயமாக நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களே அத்தகையோர் அவர்களை நாம் நரகில் புகுத்திவிடுவோம், (அதில்) அவர்கள் வேதனையை (சதா) அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கருகிவிடும் போதெல்லாம், அவை அல்லாத (வேறு புதிய) தோல்களை நாம் மாற்றிக் கொண்டேயிருப்போம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாக தீர்க்கமான அறிவுடையோனாக இருக்கிறான்.(4: 56)

நிராகரிப்பாளர்கள் நரகில் எறியப்பட்டவுடன் நரக நெருப்பால் அவர்களது தோல் கருகி வலியை உணரும் தன்மையை இழந்துவிடும். அதாவது நரம்பு முடிவிடங்கள் செயலற்றுப் போய்விடும். எனவே அவர்கள் வேதனையை தொடர்ந்தும் அனுபவிப்பதற்காகவே அல்லாஹ் அவர்களின் தோல்களைத் தொடர்ந்தும் மாற்றிக் கொண்டேயிருப்பான் என விளக்குகிறது அல்-குர்ஆன்.

தாய்லாந்தில் உள்ள Cheing Mai
பல்கலைக்கழகத்தில் உடற்கூறு (Anatomy) துறையில் தலைவராக பேராசிரியர் Togatat Tejasan இருக்கிறார். இவர் தோலிலுள்ள நோ வாங்கிகள் குறித்து நீண்டகால ஆய்வு மேற்கொண்டு பாரிய கண்டுபிடிப்புக்களை உலகிற்கு
அளித்துள்ளார். ஆனால் இவ்வறிவியல்
உண்மை 1400 வருடங்களுக்கு முன்னே அல்-குர்ஆனில் பதியப்பட்டுவிட்டதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்ததுடன்
அல்-குர்ஆனின் உன்னதத்தையும் அவர் புரிந்து கொண்டார். சவூதியின் தலைநகர் Riyadh ல் 'Scientific Signs of Quran and Sunnah' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற 8வது சவூதி மருத்துவ மாநாட்டில் பகிரங்கமாக இஸ்லாத்தின் ஏகத்துவ கோட்பாட்டை ஏற்று முஸ்லிமானார். மாஷா அல்லாஹ். அல்லாஹ் தனது நேர்வழிகாட்டியாம் அல்-குர்ஆன் மூலம் சமூகத்திற்கு நேர்வழிகாட்டிய விதத்தைப் பார்த்தீர்களா?

மேலும் "நிச்சயமாக நாம் நம்முடைய
துாதர்களை (அத்தாட்சிகளில்) தெளிவானவற்றுடன் அனுப்பி வைத்தோம், அவர்களுடன் வேதத்தையும், மனிதர்கள் நீதியைக் கொண்டு நிலைத்திருப்பதற்காக தராசையும் இறக்கினோம். இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம் அதில் போருக்கு வேண்டிய கடுமையான சக்தியும், மனிதர்களுக்குப் பயன்களும் இருக்கின்றன.'' (57:25)
என்ற வசனத்தின் மூலம் இரும்பு வானிலிருந்து இறக்கப்பட்டிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இக்கருத்தை விஞ்ஞானமும் ஆதரிக்கிறது. அதாவது பூமியிலுள்ள இரும்பானது விண்வெளியிலுள்ள பெரிய நட்சத்திரங்களில் (Giant stars) இருந்து வந்துள்ளதாக இன்றைய விஞ்ஞானம் பறைசாற்றுகிறது. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000° C ஆகவும், மத்தியின் வெப்பநிலை அண்ணளவாக 20 மில்லியன்°C ஆகவும் இருந்தாலும் கூட அவ்வெப்பநிலை இரும்பு உருவாக்கத்திற்கு போதுமானதல்ல. அண்ணளவாக 100 மில்லியன் °C வெப்பநிலை இரும்பு உருவாக்கத்திற்கு அவசியமாகின்றது. எனவே அத்தகைய வெப்பநிலையைக் கொண்ட நட்சத்திரங்களில் இரும்பு உருவாகி அவை ஒரு குறிப்பிட்ட அளவைைவிட அந்நட்சத்திரங்களில் கூடும்போது அந்நட்சத்திரங்கள் வெடிக்கின்றன. இதனால் இரும்பு விண்வெளிக்கு விடப்பட்டு பின் பூமிக்குள் நுழைகிறது. இவ்வாறுதாான் இரும்பு பூமிக்கு வந்துள்ளது. 

இவ்வாறு விஞ்ஞான கண்டுப்பிடிப்புக்கள்
பற்றி அல்-குர்ஆனிலுள்ள ஆதாரங்களை
அடுக்கிக் கொண்டே போகலாம்.
இஸ்லாமியர்களாகிய நாம் வெறுமனே
பிற சமூகத்தவர்களின் கண்டுபிடிப்புக்கள் குறித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறோமே தவிர இன்னும் அல்-குர்ஆனினுள் பூரணமாக நுழைந்து கொள்ளவுமில்லை, இக்கண்டுபிடிப்புக்கள் ஏற்கனவே அல்-குர்ஆனினுள் புதைந்துள்ளன என்பதனை அறிந்துக்கொள்ளவும் இல்லை. 

மேலும் அல்-குர்ஆனில் பல இடங்களில் "சிந்திக்கக்கூடிய கூட்டத்தினருக்கு நிச்சயமாக, இதில் பல அத்தாட்சிகள் உள்ளன” (13:3), “படிப்பினைபெறும் சமூகத்தினருக்கு அத்தாட்சியிருக்கிறது.” (16:13), “அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன'' (3:190) போன்ற வசனங்கள் அடிக்கடி அமைவதை நாம் அவதானிக்கக்கூடியதாயுள்ளது. அல்-குர்ஆனை ஆராய்ந்து அதிலுள்ள உன்னதமான கண்டுபிடிப்புக்களை உலகுக்கு அளிக்கட்டும் என்ற நோக்கிலேயே அல்லாஹுத்தஆலா இவ்வாறான சொற்பிரயோகங்களைக் கையாண்டுள்ளான் என்பதை நாம் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லையானால் நாம் வாழ்வதில் என்னதான் பயன்?

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், நவீன தொழினுட்பவியலின் உதவியுடன் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பேருண்மைகளை உள்ளடக்கிய ஒரு நூலினை 1400 வருடங்களுக்கு முன்னே அருளுவதென்றால் அது மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இறைசக்தியால் மட்டுமே முடியுமென்பது புலனாகின்றது. அதுமட்டுமல்ல, இன்று உலகளாவிய ரீதியில் அல்-குர்ஆனின் கருப்பொருள் பற்றியும் நவீன விஞ்ஞானம் குறித்தும் எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடந்தவண்ணமுள்ளன. இன்ஷா அல்லாஹ் இவ்வாராய்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ்வின் உன்னதமான மார்க்கத்தின்பால் மனித சமூகம் நெருங்கிவர உறுதுணையாய் அமையும் என நான் நம்புகின்றேன்.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


வாசகர்களே! இக்கட்டுரையை நீங்கள் வெறுமனே வாசித்துவிட்டு அல்-குர்ஆன் இவ்வளவு ஆழமானதா? என
ஆச்சரியப்படுவதோடு நின்றுவிடாமல்
நீங்களும் அல்-குர்ஆனை தினமும்
ஓதுவதுடன் அதனை ஆராய்ந்து
சமூகத்திற்கு பல கண்டுபிடிப்புக்களைச்
சமர்ப்பிக்கக் கூடியவர்களாக மாற வேண்டும். ஏனெனில் மனிதனால்
கண்டுபிடிக்கப்படாத இன்னும் எத்தனையோ பேருண்மைகள்
அல்-குர்ஆனினுள் மறைந்துள்ளன......

Previous
Next Post »