பேசிய தங்கச்சிலை

 பேசிய தங்கச்சிலைறசூல் (ஸல்) அவர்கள் கி. பி. 547 ஆம் ஆண்டு புனித மக்கமா நகரில் பிறந்தார்கள். அந்நேரத்தில் உலகம் முழுவதும் அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடந்தது. மக்கா வாசிகள் சிலைகளை தமது கடவுளர்களாகக் கொண்டு வணங்கி வந்தார்கள். இறை இல்லமாகிய கஃபத்துல்லாவில் முன்னூற்று அறுபது சிலைகளை வைத்துப் பூஜித்து வந்தார்கள். அன்றியும் பிரயாணத்தின்போது கல்லால், மரத்தினால் அல்லது மாவினால் ஆன சிலைகளைத் தம்முடன் எடுத்துச் செல்வதும் அக்கால வழக்கமாக இருந்தது. மேலும் வீடுகளிலும் சிலைகளை வைத்துப் பூஜித்தும் வந்தார்கள்.

 

நபிகளாருக்கு நாற்பதாவது வயதில் (கி. பி. 610ல்) நபிப்பட்டம் வழங்கப்பட்டு, ஒரே இறைக்கொள்கையை மக்காவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். குறைஷித் தலைவர்கள் நபிகளாரின் ஒரே இறைக் கொள்கையை ஏற்காது அவர்களுக்குப் பற்பல தொல்லைகளையும் கொடுத்து வந்தார்கள். அத்தகைய இறைமறுப்பவர்களுள் வலீத் என்பவனும் ஒருவன். அவன் தனது வீட்டில் ஒரு தங்கச் சிலையை வைத்து அதனைக் கடவுளெனப் பூசித்து வந்தான்.


 அந்தத் தங்கச் சிலை ஒரு நாள் திடீரெனப் பேசத் தொடங்கியது ”மக்களே! முஹம்மத் அல்லாஹ்வின் திருத்தூதர் அல்லர். அவரை நீங்கள் நம்பாதீர்கள்” என்று கூறிற்று. அது கேட்டு மகிழ்ச்சியடைந்த வலீத் தன்னுடைய நண்பர்களான அபூஜஹ்ல், உத்பா, உமையா, அபூ ஸுப்யான் போன்றோரிடம் சென்று விடயத்தை கூறினான். வியப் புற்ற அவர்கள் அவன் வீட்டிற்கு வந்தார்கள். அப்பொழுது சிலை மீண்டும் அதே போல பேசியது. மறுநாள் ஊர் மக்கள் அனைவரும் அழைக்கப்பட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் சிலை பேசுவதைக் கேட்பதற்குச் சென்றிருந்தார்கள். 

இதேபோன்று மேலும் இஸ்லாமிய வரலாற்றுக்கள் பற்றி அறிந்து கொள்ள:றசூல் (ஸல்) அவர்கள் நபியாக ஆக்கப்பட்ட செய்தியை அறிந்த ஜின்கள் பல நபியவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டன. மற்றும் சில ஜின்கள் இறைமறுப்பனவாகவே இருந்து வந்தன.

 

இஸ்லாத்தை ஏற்றிருந்த ஜின்களுள் முஹைமின் இப்னு அப்ஹர் என்பவரும் ஒருவர். அவர் தனது மனைவி சகிதம் தவர் மலையில்

வசித்து வந்தார். அவர் ஏதோ தேவையின் காரணமாக வெளியூர் சென்றிருந்த வேளையில் தான் வலீதுடைய தங்கச்சிலை பேசியது.

 

இப்னு அப்ஹர் ஊர் வந்ததும் அவருடைய மனைவி அழுது பிரலாபித்து ”முஸப்பர்” என்ற காபிர் ஜின் வலீதுடைய தங்கச்சிலைக்குள் புகுந்து நபி (ஸல்) அவர்களுக்கு விரோதமாகப் பேசிய செய்தியை எடுத்துரைத்தாள். அன்றியும் முஸப்பர் இன்றும் அங்கு செல்லுகிறான். அவனுடைய பேச்சைக் கேட்பதற்காக மக்கள் ஒன்று கூடுகிறார்கள்” என்ற விபரத்தையும் அவள் கூறினாள்.

 

மனைவியின் சொல்லைக் கேட்டுக் கோபாவேசங் கொண்ட முஹைமின் இப்னு அப்ஹர் வாளை உருவிக் கொண்டு சென்றார். வழியில் சென்றுகொண்டிருந்த முஸப்பரை ஒரே வீச்சில் கொன்று விட்டு வலீதின் தங்கச்சிலைக்குள் அவர் புகுந்து கொண்டார். 

மக்கள் ஒன்றுசேர்ந்ததும் வலீத் தனது சிலைக்கு முன் விழுந்து வணங்கி, பேசுமாறு பணித்தான். அப்போது பொற்சிலை பேசத் தொடங்கியது. 


மக்கா வாசிகளே! நன்றாக அறிந்து கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் ஆவார். அவர்கள் உண்மையான வழியையே காட்டுகிறார். அவர் கொண்டுவந்த மார்க்கமும் உண்மையானதே. நீங்கள் செய்யும் சிலை வணக்கம் தீயதாகும். அது பொய்யான வணக்கமாகும். இறைத்தூதரைப் பின்பற்றாதவர்கள் நரகில் தள்ளப்படுவார்கள். எனவே, அறிவுடையோராய் நடந்து கொள்ளுங்கள் ! ” என்று அது கூறிற்று. 


இதனைக் கேட்ட வலீத் அவமானம் மேலிட தனது தங்கச் சிலையை நிலத்தில் போட்டு உடைத்து எறிந்தான். இதேபோன்று மேலும் அறிந்து கொள்ள:
படிப்பினை:-

உண்மை நிலைத்து நிற்கும். பொய்மை அழிந்தே தீரும் என்ற உண்மை இச்சம்பவம் மூலம் எமக்குத் தெளிவாகியுள்ளது. 


Previous
Next Post »