இறை நம்பிக்கை

 ஈமான்


இஸ்லாத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய முக்கிய ஆறு அம்சங்கள் உள்ளன. அதனையே 'அர்கானுல் ஈமான்' என்போம். அவையாவன முறையே;
1.அல்லாஹ் 
2.மலக்குகள்
3.வேதங்கள் 
4.றஸூல்மார்கள்
5.இறுதி நாள்
6.அல்கத்ர்

ஈமான் பற்றி ஸஹீஹுல் புகாரி கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைப் பற்றி நோக்குவோம்.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-பாடம்:1


بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ 
بُنِيَ اْلإِسْلاَمُ عَلَى خَمْسٍ وَهُوَ قَوْلٌ وَفِعْلٌ. وَيَزِيْدُ وَيَنْقُصُ.


"இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.


قَالَ اللهُ تَعَالىَ: {لِيَزْدَادُوْا إِيْمَانًا مَعَ إِيْمَانِهِمْ}،   
{وَزِدْنَاهُمْ هُدًى}،    

அல்லாஹ் கூறுகிறான்:
"தமது நம்பிக்கையுடன் அவர்கள் (மேலும்) நம்பிக்கையை அதிகமாக்குவதற்காக......" (48:4)

அல்லாஹ் கூறுகிறான்:
"நாம் அவர்களுக்கு (அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்) நேர்வழியை அதிகமாக்கினோம்" (18:13)

 { وَيَزِيْدُ اللهُ الَّذِيْنَ اهْتَدَوْا هُدًى}،  
{وَالَّذِينَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَآتَاهُمْ تَقْوَاهُمْ}،

அல்லாஹ் கூறுகிறான்:
"(ஈமான் மூலம்) நேர்வழி 
பெற்றவர்களுக்கு நேர்வழியை (மேலும்)
அல்லாஹ் அதிகமாக்குகின்றான்":
(19:76)

அல்லாஹ் கூறுகிறான்:
"யார் (ஈமான் மூலம்) நேர்வழி அடைந்துவிட்டனரோ அவர்களுக்கு
(அல்லாஹ் மேலும்) நேர்வழியை அதிகமாக்குகின்றான். மேலும் அவர்களுக்கு அவர்களின் இறையச்சத்தையும் வழங்குகிறான்" (47:17)

{وَيَزْدَادُ الَّذِيْنَ آمَنُوْا إِيْماَناً}،

"ஈமான் கொண்டவர்கள் தமது
ஈமானை (மேலும்) அதிகமாக்கிக்
கொள்ள வேண்டும் என்பதற்காக....."
(74:31)

وَقَوْلُهُ{أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيْماَناً فَأَمَّا الَّذِيْنَ آمَنُوْا فزَادَتْهُمْ إِيْماَناً}، 

அல்லாஹ் கூறுகிறான்:
"ஏதேனும் ஒரு அத்தியாயம்  அருளப்பட்டால் 'யாருக்கு இது ஈமானை அதிகமாக்கப் போகிறது?' என்று (கிண்டலாக) கேட்பவர்களும் (நயவஞ்சகர்களான) அவர்களில்
உண்டு. யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு அது ஈமானை அதிகமாக்கும் "(9:124)

وَقَوْلُهُ جَلَّ ذِكْرُهُ{فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيْماَناً} ،     

அல்லாஹ் கூறுகிறான்:
"(உங்கள் பகைவர்களான) அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று (சில) மக்கள் யாரிடம் கூறினார்களோ அவர்களுக்கு அல்லாஹ் ஈமானை அதிகமாக்கினான் " (3:173)

وَقَوْلُهُ تَعَالَی{وَمَازَادَهُمْ إِلاَّ إِيْمَاناً وَتَسْلِيْماً}،  

அல்லாஹ் கூறுகிறான்:
"அது அவர்களின் ஈமானையும்
அர்ப்பணிக்கும் தன்மையையும் தவிர
(வேறெதனையும்)
அதிகமாக்கிடவில்லை " (33:22)

وَالْحُبُّ فِى اللهِ وَالْبُغْضُ فِى اللهِ اْلإيْمَانِ

 மேலும் அல்லாஹ்வுக்காக (ஒருவரை) நேசிப்பதும் அல்லாஹ்வுக்காக (ஒருவரை) கோபிப்பதும் ஈமானைச் சார்ந்ததுதான். (என்பது ஒரு நபி மொழியின் கருத்தாகும்).

وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيْزِ اِلَى عَدِيِّ بْنِ عَدِيًّ: اِنَّ لِلاِيْماَنِ فَرَائِضَ وَشَرَائِعَ وَحُدُوْدًا وَسُنَناً، فَمَنِ اسْتَكْمَلَهاَ إِسْتَكْمَلَ اْلإِيْمَانَ، وَمَنْ لَمْ يَسْتَكْمِلْهَا لَمْ يَسْتَكْمِلِ اْلإِيْمَانَ. فَإِنْ أَعِشْ فَسَأُبَيِّنُهَا لَكُمْ حَتَّى 
تَعْلَمُوْابِهاَ، وَأِنْ أَمُتْ فَماَ أَناَ عَلَى صُحْبَتِكُمْ بِحَرِيْصٍ. 

உமர் பின் அப்துல் அஸீஸ் (தமது ஆளுநர்) அதி பின் அதி என்பவருக்கு எழுதியதாவது: 
'ஈமானுக்குச் சில கடமைகளும் சில சட்டதிட்டங்களும் சில வரையறைகளும் சில நியதிகளும் (ஸுன்னத்களும்) உள்ளன. எனவே எவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றுகிறாரோ அவர் (தமது) ஈமானை முழுமைப்படுத்திக் கொண்டவராவார். எவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றவில்லையோ
அவர் (தமது) ஈமானை முழுமைப்படுத்திக் கொள்ளவில்லை. நான் (மேலும் சில காலம் இவ்வுலகில்) வாழ்வேனானால் நீங்கள் (அதன்படி) செயல்படுவதற்காக அவற்றை உங்களுக்கு விளக்குவேன். (ஒரு வேளை) நான் அதற்குள் இறந்துவிட்டால் (காலமெல்லாம்) நான் உங்களுடனேயே இருக்க வேண்டுமென்றபேராசை பிடித்தவனல்லன்'.

وَقاَلَ إِبْرَاهِيْمُ( وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِيْ)

இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்: 
"...என்றாலும் என் உள்ளம் அமைதி பெறுவதற்காகவே (இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்து காட்டுமாறு உன்னிடம் வேண்டினேன்)" (2:260)

وَقَالَ مُعاَذٌ: إِجْلِسْ بِناَ نُؤْمِنُ سَاعَةً.

(அஸ்வத் பின் ஹிலால் என்ற நபித் தோழரிடம்) முஆது(ரலி) கூறினார்கள்: 'எம்முடன் நீங்களும் அமருங்கள். நாம் சிறிது நேரம் ஈமான் கொள்வோம்'.

وَقاَلَ ابْنُ مَسْعُوْدٍ اَلْيَقِيْنُ اَلايْمَانُ كُلُّهُ.

இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்கள்:
'யகீன் (சந்தேகமற்ற நிலை) என்பது முழுமையான ஈமான் ஆகும்'.

وَقَالَ ابْنُ عُمَرَ: لاَ يَبْلُغُ الْعَبْدُ حَقِيْقَةَ  التَّقْوَی حَتَّی يَدَعَ ماَحاَكَ فِى الصَّدْرِ .

இப்னு உமர் (ரலி) கூறினார்கள்:
'தம் நெஞ்சில் (இது தவறாக இருக்குமோ என்று) உறுத்துவதைக்கூட விட்டு விடும் வரை உண்மையான இறையச்சத்தை ஓர் அடியான் அடைய முடியாது.

وَقَالَ مُجَاهِدٌ (شَرَعَ لَكُمْ ...) أَوْصَيْنَاكَ ياَمُحَمَّدُوَإِياَّهُ دِيْنًا وَاحِدًا

"நூஹுக்கு அவன் எந்த மார்க்கத்தை உபதேசித்தானோ அதையே அவன் உங்களுக்கும் விதியாக்கி இருக்கின்றான்." (42:13) என்ற திருமறை வசனத்திற்கு விளக்கம் தரும் போது முஜாஹித் (ரஹ்) கூறியதாவது: "முஹம்மதே! உமக்கும் (நூஹ் நபியாகிய) அவருக்கும் நாம் ஒரே மார்க்கத்தையே உபதேசித்திருக்கிறோம்." என இறைவன் நபி(ஸல்) அவர்களை நோக்கிக் கூறினான்.

وَقَالَ ابْنُ عَبَّاسٍ(شِرْعَةً وَمِنْهَاجًا): سَبِيْلاً وَسُنَّةٌ

"உங்களில் ஒவ்வொருவருக்கும் நாம் ஒரு ஷரீ அத்தையும் ஒரு மின்ஹாஜையும் ஏற்படுத்தியிருக்கிறோம்."(5:48)
என்ற இறை வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் கூறியதாவது: "முன் சென்ற சமுதாயத்தினருக்கு மார்க்கத்தின் துணைப்பிரிவுச் சட்டங்களில் ஒவ்வொரு
சமுதாயத்திற்கும் ஒவ்வொரு வழியையும் பாதையையும் ஏற்படுத்தியிருக்கிறோம்".

பாடம்: 2


بَابٌ دُعَاؤُكُمْ إَيْماَنُكُمْ

(25:77 வது வசனத்தில் கூறப்பட்டுள்ள) உங்களின் துஆ என்பதன் கருத்து உங்களின் ஈமான் என்பதாகும்.

حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوْسَى قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِيْ سُفْياَنَ عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ عَنِ ابْنِ عُمَرَ رَضِیَ اللهُ عَنْهُمَاقَالَ:
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّی اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ اْلإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةُ أَنْ لاَإِلَهَ اِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًارَسُوْلُ اللهِ، وَإِقاَمُ الصَّلاَۃِ،
وَإِيْتاَءُ الزَّكاَةِ، وَالْحَجُّ، وَصَوْمُ رَمَضَانَ 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை
என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது." இதை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

பாடம்: 3


                                                            باَبُ أُمُوْرِ اْلإِيْماَنِ

ஈமானின் காரியங்கள்

 وَقَوْلُ اللهِ تَعَالَى( لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، وَلَكَنَّ الْبِرَّ مَنْ آمَنَ باِ اللهِ وَالْيَوْمِ اْلآخِرِ وَالْمَلاَئِكَةِ
وَالْكِتَابِ وَالَّنِبِّيِّيْنَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِى الْقُرْبَى وَ الْيَتَامَى وَالْمَسَاكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَالسَّائِلِيْنَ وَ فِى الرِّقاَبِ وَأَقَامَ الصَّلاَةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ إِذَاعَاهَدُوْا وَالصَّابِرِيْنَ فِى الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِيْنَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِيْنَ صَدَقُوْاوَ أُولَئِكَ هُمُ الْمُتَّقُوْنَ)

அல்லாஹ் கூறுகிறான்:
"மேற்குப் பக்கமோ கிழக்குப் பக்கமோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது மட்டும் நன்மையாகி விடாது. எனினும் யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், தூதர்களையும் நம்பித் தமது செல்வத்தை, விருப்பத்திற்குரிய தாயினும் அதை (அல்லாஹ்வுக்காக) உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், பரம ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமை (விடுதலை)க்கும் வழங்கி, தொழுகையையும் நிலைநிறுத்தி, ஸகாத்தும் கொடுத்து வருகிறாரோ அவரும் உடன்படிக்கை செய்தால் அதை
நிறைவேற்றுபவர்களும் வறுமையிலும், சிரமங்களிலும், நோய் நொடிகளிலும், யுத்தத்தின் கடுமையிலும் பொறுமையைக் கடைபிடித்தவர்களும் செய்யும் நன்மை தான் (உண்மையில்) நன்மையாகும். இவர்கள் தாம் நேர்மையாய் வாழ்ந்தவர்கள்.
மேலும் இவர்கள் தாம் இறையச்சமுடையவர்கள் ஆவர் ". (2:177)

(قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُوْنَ) الآية

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
"தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருக்கும் மூமின்கள் வெற்றி பெற்று விட்டனர்" (23:1,2)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ ‏"‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளை யாகும்".
இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.

பாடம் : 4


بَابٌ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

"யார் பிற முஸ்லிம்களுக்குத் தம் நாவினாலும் கையினாலும் தொல்லை தரவில்லையோ அவர்தாம் முஸ்லிம்".

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، وَإِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ عَبْدُ الأَعْلَى عَنْ دَاوُدَ عَنْ عَامِرٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றை விட்டு ஒதுங்கிக் கொண்டாரோ அவரே துறந்தவர் (முஹாஜிர்) ஆவார்." இதனை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

பாடம்: 5


باَبُ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ

இஸ்லாத்தில் சிறந்தது எது?

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيِّ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ ‏ "‏ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ‏"‏‏


அபூ மூஸா(ரலி) கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) சொன்னார்கள்: "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரது செயலே சிறந்தது.”

பாடம்: 6


باَبُ إِطْعَامُ الطَّعَامِ مِنَ الإِسْلاَمِ

உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓரம்சம்.

حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ ‏ "‏ تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ ‏"

அப்துல்லாஹ்பின் அம்ர் (ரலி) கூறியதாவது :
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாமி(யப் பண்புகளில் சிறந்தது எது' எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) கூறினார்கள்: "(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்".

பாடம்: 7


باَبُ مِنَ الإِيمَانِ أَنْ يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

"ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது ஈமானைச் சேர்ந்ததுதான் "

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏

وَعَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ ‏"‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும்
விரும்பும் வரை (முழுமையான) ஈமான் கொண்டவர் ஆகமாட்டார்". இதை அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

பாடம்: 8


باَبٌ حُبُّ الرَّسُولِ صلى الله عليه وسلم مِنَ الإِيمَانِ

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது ஈமானில் ஓரம்சம்.

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ ‏"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்". இதை அபூஹுரைரா (ரலி)
அறிவிக்கிறார்கள்.

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ ‏"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) ஈமான் கொண்டவர் ஆக மாட்டார்". இதை அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.

பாடம்: 9


باَبٌ حَلاَوَةِ الإِيمَانِ

ஈமானின் சுவை

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ ‏"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது ". இதை அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.

பாடம் : 10


باَبٌ عَلاَمَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ

அன்சாரிகளை நேசிப்பது ஈமானின் ஓரம்சம்.

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ ‏"‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஈமானின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்" இதை அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.

பாடம்: 11


حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ، عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ ـ رضى الله عنه ـ وَكَانَ شَهِدَ بَدْرًا، وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ ‏ "‏ بَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلاَ تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ، فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ، وَإِنْ شَاءَ عَاقَبَهُ ‏"‏‏.‏ فَبَايَعْنَاهُ عَلَى ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும் போது கூறினார்கள்:
"அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில் எவர் (அவற்றை) நிறைவேற்றுகிறாரோ அவரது நற்கூலி
அல்லாஹ்விடத்தில் உள்ளது.
மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக)
இவ்வுலகில் தண்டிக்கப்பட்டு விட்டால் அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்து விட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்". உடனே நாங்களும் அவ்வாறு
நடப்போம் என்று அவர்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். இதை, பத்ருப் போரில் கலந்து கொண்டவரும் அகபா உடன்பாடு நடந்த இரவில் கலந்து கொண்ட தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் ஸாமித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

பாடம்: 12


باَبٌ مِنَ الدِّينِ الْفِرَارُ مِنَ الْفِتَنِ

குழப்பங்களை விட்டு ஒதுங்கிவிடுவது மார்க்கத்தின் ஓரம்சம்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ ‏"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமுடைய செல்வங்களில் ஆடு தான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து தீனைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும்
இடங்களிலும் சென்று வாழ்வான் ". இதை அபூஸயீதுல் குத்ரி (ரலி) அறிவிக்கிறார்கள்.

பாடம்: 13


باَبُ قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏«أَنَا أَعْلَمُكُمْ بِاللَّهِ»

"நான் உங்கள் அனைவரிலும் இறைவனைப் பற்றி மிக அதிகமாக அறிந்தவன்" என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று.

وَأَنَّ الْمَعْرِفَةَ فِعْلُ الْقَلْبِ لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلَكِنْ يُؤَاخِذُكُمْ
بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ}

(அல்லாஹ்வைப் பற்றி) அறிதல்என்பது உள்ளத்தின் செயலே! ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: "வேடிக்கையாகச் செய்துவிடும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் (குற்றம்) பிடிக்க மாட்டான்; எனினும் உங்கள் உள்ளங்கள் (உறுதியுடன்) செய்பவற்றிற்காகவே
உங்களை அவன் குற்றம் பிடிப்பான் ".

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمَرَهُمْ أَمَرَهُمْ مِنَ الأَعْمَالِ بِمَا يُطِيقُونَ قَالُوا إِنَّا لَسْنَا كَهَيْئَتِكَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ‏.‏ فَيَغْضَبُ حَتَّى يُعْرَفَ الْغَضَبُ فِي وَجْهِهِ ثُمَّ يَقُولُ ‏ "‏ إِنَّ أَتْقَاكُمْ وَأَعْلَمَكُمْ بِاللَّهِ أَنَا ‏"‏‏

ஆயிஷா (ரலி) கூறியதாவது:
நல்லவற்றை(ச் செய்யுமாறு) நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அத்தோழர்களால் இயன்ற செயல்களையே ஏவுவார்கள். இதனை அறிந்த நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். ஆனால் எங்கள் நிலையோ உங்கள் நிலையைப் போன்றதன்று' என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரியும் அளவு கோபப்பட்டார்கள். பின்னர், "நிச்சயமாக உங்கள் அனைவரையும் விட நான் அல்லாஹ்வை நன்கு அறிந்தவனும் அவனை அதிகம் அஞ்சுபவனும் ஆவேன்" என்று கூறினார்கள்.

பாடம்: 14


باَبُ مَنْ كَرِهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ مِنَ الإِيمَانِ

நெருப்பில் எறியப்படுவதை வெறுப்பது போல் ஒருவர் நிராகரிப்பில் திரும்புவதை வெறுப்பது ஈமானின் ஓரம்சம்.

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَمَنْ أَحَبَّ عَبْدًا لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَمَنْ يَكْرَهُ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ، كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ ‏"‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து
விட்டனவோ அவர் ஈமானின் சுவையை
உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியவராவது; ஒருவர் மற்றொருவரை அல்லாஹவுக்காகவே நேசிப்பது; குப்ரிலிருந்து அல்லாஹ் அவரை விடுவித்த பின், நெருப்பில்
வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது ". இதை அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

பாடம்: 15


باَبُ تَفَاضُلِ أَهْلِ الإِيمَانِ فِي الأَعْمَالِ

இறை நம்பிக்கையாளர்களிடையே செயல்களில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ، ثُمَّ يَقُولُ اللَّهُ تَعَالَى أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ‏.‏ فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ اسْوَدُّوا فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَا ـ أَوِ الْحَيَاةِ، شَكَّ مَالِكٌ ـ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً‏"‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(மறுமையில் விசாரணைகள் முடிந்தபின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை
(நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு 'ஹயாத்' என்ற ஆற்றில் போடப் படுவார்கள். ---இந்த
ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் 'ஹயா' என்று நபி (ஸல்) சொன்னார்களோ என்று சந்தேகப் படுகிறார்-- அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போலப் பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?"

இதை அபூஸயீதுல் குத்ரி(ரலி)
அறிவிக்கிறார்கள். இதே ஹதீஸை உஹைப் அறிவிக்கும் போது (ஹயா அல்லது ஹயாத் என்று) சந்தேகத்தோடு அறிவிக்காமல் 'ஹயாத்' என்னும் ஆறு என்று உறுதியாகக் குறிப்பிடுகிறார். மேலும் கடுகளவேனும் ஈமான் என்பதற்குப் பதிலாகக் கடுகளவேனும் நன்மை என்ற வார்த்தையையும் குறிப்பிடுகிறார்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَىَّ، وَعَلَيْهِمْ قُمُصٌ مِنْهَا مَا يَبْلُغُ الثُّدِيَّ، وَمِنْهَا مَا دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَىَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ ‏"‏‏.‏ قَالُوا فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الدِّينَ ‏"‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் உறங்கிக் கொண்டிருக்கும் போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்கள் மீது (பலவிதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர்.
அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு
வரை நீண்டிருந்தன; இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் பின் கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள் ".

அப்போது நபித் தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? "மார்க்கம்" என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள். இதை அபூஸயீதுல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார்கள்.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


பாடம்: 16


باَبٌ الْحَيَاءُ مِنَ الإِيمَانِ

வெட்கம் ஈமானின் ஓரம்சம்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم 

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறியதாவது:
அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, "அவரை (க்கண்டிக்காதீர்கள்;) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


Previous
Next Post »