ஜிஹாத்

 ஜிஹாத்


அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதற்கு மகத்தான அந்தஸ்து உண்டு. உண்மையில் ஜிஹாத் செயல்களிலேயே மிகச்சிறந்தது. இது நரகத்தை விட்டும் தப்பிப்பதற்குக் காரணமாகும்.

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-


உள்ளடக்கம்


  1. ஜிஹாதின் சிறப்பு
  2. போராளிக்கும் உயிர்த்தியாகிக்கும் கிடைக்கும் நன்மை
  3. ஜிஹாதில் நபித்தோழர்கள்

ஜிஹாதின் சிறப்பு


இறைநம்பிக்கை கொண்டவர்களே நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பற்றக்கூடிய வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வின் வழியில் உங்கள் பொருள்களாலும் உயிர்களாலும் ஜிஹாத் செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். (61:10,11)

மிகச் சிறந்த செயல் எதுவென நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது என விடையளித்தனர். அதற்கடுத்தது எது என்று கேட்கப்பட்டது அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதென விடையளித்தனர். அதற்கடுத்து எதுவென கேட்கப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் என விடையளித்தனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்:புகாரி (26, 1519), முஸ்லிம், திர்மிதி(1706) காலையிலோ அல்லது மாலையிலோ அல்லாஹ்வின் பாதையில் ஒரு தடவை புறப்படுவது இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:புகாரி (2792), முஸ்லிம், திர்மதி (1700) எந்த அடியானுடைய பாதங்களில் அல்லாஹ்வின் பாதையில் புழுதிபடியவில்லையோ அவனை நரகம் தீண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் (ரழி) நூல்: புகாரி (2811) அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதற்கு நிகரானது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது "அதற்கு நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்" என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அவர்களிடம் இரண்டு மூன்று தடவை கேட்டபோதும் “அதற்கு நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்” என்றே விடையளித்தனர். பிறகு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்பவரின் உவமையானது நோன்பையும் தொழுகையையும் விடாது கடைபிடித்து இறைவசனங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவரைப் போன்றதாகும். இத்தகைய அறப்போராளி இல்லம் திரும்பும் வரை இந்த நிலையிலேயே இருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புகாரி (2787) முஸ்லிம், திர்மதி (1669)

போராளிக்கும் உயிர்த்தியாகிக்கும் கிடைக்கும் நன்மை


ஜிஹாத் செய்வதற்கு மாபெரும் கூலியும் அந்தஸ்தும் உண்டு. இது சொர்க்கத்தில் நுழைவதற்கு பெரும் காரணமாக அமைகின்றது. கொல்லப்படும் வேதனை அவருக்கு மிகவும் இலேசாக இருக்கும். உயிர் தியாகம் செய்வது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுவதற்கு மிகப்பெரும் காரணமாக அமைகின்றது.

இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் நம்பிக்கை கொண்டதற்காகவும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்காகவுமே புறப்பட்டுச் சென்றவரை சுவர்க்கத்தில் சேர்க்கவோ அல்லது கூலியைப் பெற்றவராகவோ போர்ச் செல்வங்களைப் பெற்றவராகவோ அவருடைய வீட்டிற்குத் திரும்பக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான். முஹம்மதுடைய உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் பாதையில் எவர் காயம்பட்டாலும் அவர் காயம்பட்ட அதே நிலையிலேயே மறுமையில் வருவார். அதன் நிறம் இரத்தத்தின் நிறமாகவும் வாடை கஸ்தூரியின் வாடையாகவும் இருக்கும். முஹம்மதுடைய உயிர் எவன் வசமுள்ளதோ அவன் மீது சத்தியமாக முஸ்லிம்களுக்குச் சிரமமாக இருக்காவிட்டால் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியக் கூடிய எந்தச் சிறு படையுடனும் ஒருபோதும் நான் செல்லாமல் இருந்திருக்கமாட்டேன். ஆயினும் அவர்கள் (போராளிகள் ) அனைவருக்கும் வாகனம் ஏற்பாடு செய்வதற்கு என்னிடம் வசதியில்லாமலிருந்தது. அதுபோல அவர்களிடமும் வசதியில்லாமல் இருந்தது. ஒருக்கால் நான் அச்சிறு படையுடன் சென்றிருந்தால் என்னோடு வராமல் பின் தங்கிவிடுவது வாகன வசதியில்லாதோருக்கு சிரமமாகி விட்டிருக்கும். முஹம்மதுடைய உயிர் எவன் வசமுள்ளதோ அவன் மீது சத்தியமாக நிச்சயமாக நான் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டு மீண்டும் (உயிர்ப்பிக்கப்பட்டு) போர் புரிந்து கொல்லப்பட்டு மீண்டும் (உயிர்ப்பிக்கப்பட்டு ) போர் புரிந்து கொல்லப்படுவதையே விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல் : புகாரி (2798), முஸ்லிம். விரல்களால் கிள்ளிவிடப்படுவதை ஒருவர் எப்படி எடுத்துக் கொள்கிறாரோ அவ்வாறே உயிர்தியாகி தான் கொல்லப்படுவதையும் எடுத்துக்கொள்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: திர்மிதி (1719) சொர்க்கத்திற்குச் சென்றவர்களில் உயிர்த்தியாகியைத் தவிர வேறெவரும் இவ்வுலகத்திலுள்ள அனைத்தும் அவருக்குக் கிடைத்தாலும் இவ்வுலகிற்கு திரும்பி வருவதை விரும்பமாட்டார். அல்லாஹ் அவருக்கு அளித்த மதிப்பைக் கண்டதால் அவர் மட்டும் இவ்வுலகிற்குத் திரும்ப வந்து அல்லாஹ்வின் பாதையில் பத்துத் தடவை கொல்லப்பட வேண்டும் என விரும்புவாரென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்: புகாரி (2817), முஸ்லிம்,திர்மிதி (1713) உயிர் தியாகிக்கு கடனைத் தவிர அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல் : முஸ்லிம், திர்மிதி (1693)

ஜிஹாதில் நபித்தோழர்கள்

ஸஹாபாக்களிடம் பலமான ஈமானும் அல்லாஹ்வின் பாதையில் உயிர்தியாகம் செய்வதற்கான ஆவலும் இருந்தது. அவர்களிடம் வீரம், நன்மையின் பால் விரைதல் இருந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (பத்ரை நோக்கிப்) புறப்பட்டார்கள். இறுதியில் இணைவைப்பவர்களுக்கு முன்பாகவே பத்ரை அடைந்தார்கள். பிறகு இணைவைப்பவர்களும் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கு உங்களுக்கு முன்பே நான் வராமல் இருக்க முடியாது என்று கூறினார்கள். பிறகு இணைவைப்பவர்கள் நெருங்கி வந்தபோது நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தைப் பெறுவதற்காக எழுந்து வாருங்கள். அதன் அகலம் வானங்கள் மற்றும் பூமியளவு இருக்கும்” என்று கூறினார்கள். அப்போது உமைர் பின் ஹிமாம் (ரழி), "அல்லாஹ்வின் தூதரே! வானங்கள் மற்றும் பூமி அளவுக்கு அகலமான சொர்க்கமா”? எனக் கேட்டார் நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என பதிலளித்ததும் "ஆஹா! ஆஹா!" என்று உமைர் (ரழி) கூறினார்கள். "ஆஹா! ஆஹா! என்று கூற உமைத் தூண்டியதெது?" என நபி(ஸல்) அவர்கள் வினவியதும் உமைர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசியாக ஆசைப்பட்டே அவ்வாறு கூறினேன்” என விடையளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக நீர் சொர்க்கவாசிதான்” என்று கூறியவுடன் உமைர் (ரழி) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து பேரீத்தம் பழங்களை எடுத்துத் தின்று பின்னர் எதிரிகளுடன் போர் புரிந்து கொல்லப்பட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்: முஸ்லிம். எனது சிறிய தந்தை அனஸ் பின் நழ்ரு (ரழி) அவர்கள் பத்ருப்போரில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள், (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! இணைவைப்பவர்களுடன் நடக்கின்ற போரில் அல்லாஹ் என்னைக் கலந்து கொள்ளச் செய்தால் நான் எவ்வாறு செயலாற்றுவேன் என்பதை நிச்சயம் அல்லாஹ் பார்க்கத்தான் போகிறான்" என்று கூறினார்கள். அதன் பிறகு உஹதுப் போர் நடந்த போது களத்தில் முன்னேறிச் சென்றார்கள். அங்கு அவர்களை ஸஃது பின் முஅத் (ரழி) அவர்கள் சந்தித்தார்கள். அப்போது அனஸ் பின் நழ்ரு அவர்கள், "ஸஃத் பின் முஆத் (ரழி) அவர்களே! நழ்ருடைய இறைவன் மீது சத்தியமாக உஹத் மலைக்கு அப்பாலிருந்து நான் சொர்க்கத்தின் வாடையை உணர்கிறேன்" எனக் கூறினார்கள். பிறகு ஸஃது (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! அனஸ் பின் நழ்ர் செயல்பட்டது போல என்னால் முடியாது" எனக் கூறினார்கள். அனஸ் பின் (ரழி) உடலில் வாளால் அல்லது ஈட்டியால் அல்லது அம்பால் ஏற்பட்ட எண்பதுக்கும் அதிகமான காயங்களை நாங்கள் பார்த்தோம். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்: புகாரி (2805), முஸ்லிம்

மேலும் அறிந்து கொள்ள கீழுள்ளதை அழுத்தவும் :-ஒருகிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களை நம்பிக்கை கொண்டு அவர்களைப் பின்பற்றினார். பின்னர் (நபியவர்களிடம்) "நான் உங்களுடன் போருக்குப் புறப்பட்டு வருவேன்" என்று கூறினார். இவர் குறித்து சில அறிவுரைகளை தம் தோழர்கள் சிலரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் ஒரு போர் நடந்போது நபி (ஸல்) அவர்களுக்கு சில போர்ச் செல்வங்கள் கிடைத்தன. அவற்றை அவர்கள் பங்கிட்டனர். அதில் அம்மனிதருக்கும் ஒரு பங்கு வைத்து அதைத் தம் தோழர்களிடம் கொடுத்தனுப்பினர். அப்போது அவர் தோழர்களின் ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் வந்ததும் அவருக்குரிய பங்கை அவர்கள் கொடுத்தபோது இது என்னவென்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உங்களுக்காகத் தந்த பங்காகும் என்று அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அதை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது என்னவென்று கேட்டார். அவர்கள், நான் உனக்காகத் தந்த பங்கு என்று கூறினார்கள். அப்போது அவர், இதற்காக நான் உங்களைப் பின்பற்றவில்லை. மாறாக தனது தொண்டையைச் சுட்டிக்காட்டி இந்த இடத்தில் நான் அம்பால் தாக்கப்பட்டு மரணம் அடைந்து சொர்க்கத்தில் நுழைய வேண்டும் என்பதற்காகவே நான் உங்களைப் பின்பற்றினேன் என்று கூறினார். அதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் நீ அல்லாஹ்வை மெய்ப்படுத்தினால் அவன் உன்னை மெய்ப்படுத்துவான் என்று கூறினார்கள். பிறகு தோழர்கள் அந்த இடத்தில் கொஞ்சநேரம் தங்கியிருந்து விட்டு எதிரிகளுடன் போர் புரிவதற்கு எழுந்து சென்றனர். அப்போது நடந்த அந்தப் போரில் அவர் கொல்லப்பட்டார். பிறகு அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிக் கொண்டு வரப்பட்டார். அவர் சுட்டிக் காட்டியவாறு (அவர் தொண்டையில்) அம்பு தைத்திருந்தது. இவர்தான் அந்த மனிதரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். தோழர்கள் ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வை அவர் மெய்ப்படுத்திவிட்டார். அல்லாஹ்வும் அவரை மெய்ப்படுத்திவிட்டான்." அறிவிப்பவர்: ஷத்தாத் பின் ஹாத் (ரழி) நூல்: நஸயீNewest
Previous
Next Post »